×

மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்

நாமக்கல், மார்ச் 19:  நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, அரசுத்துறைகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் சார்பில், பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு விட்டன. பூங்காக்களும் நேற்று மூடப்பட்டது. நாமக்கல் ரயில்வே ஸ்டேசனுக்கு வரும் பயணிகளுக்கு, நேற்று எர்ணாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் ராஜேந்திரன் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர்.நாமக்கல் பேருந்து நிலையத்துக்கு வரும் அனைத்து அரசு பேருந்துகளிலும், பயணிகள் சீட் மற்றும் பஸ்சின் கம்பிகள் மீது கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டது.

நாமக்கல் பொன்விழா நகரில் புதன்கிழமைதோறும் வாரசந்தை நடைபெறும். நேற்று மதியம் சந்தைக்கு வந்த வியாபாரிகளை, வகுரம்பட்டி ஊராட்சி மன்றதலைவர் ராஜாரகுமான் கொரோனா பீதியை தடுக்க வாரசந்தை வரும் மார்ச் 31ம் தேதி வரை நடைபெறாது என கூறி திருப்பி அனுப்பி வைத்தார். நாமக்கல் ஆபிசர் கிளப்பும் வரும் 31ம் தேதி வரை மூடப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Tags : district ,
× RELATED மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 7 பேர் பலி