×

புதுச்சத்திரத்தில் கொரோனா விழிப்புணர்வு முகாம்

சேந்தமங்கலம், மார்ச் 19: புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு கொரோனோ தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியக்குழு தலைவர் சாந்தி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன், பிரபாகரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் ராம்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் வட்டார மருத்துவ அலுவலர் அமுதா கலந்து கொண்டு பேசியதாவது: புதுச்சத்திரம் வட்டார ஊராட்சி மன்றத் தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் தங்கள் கிராம பகுதிக்கு, வெளிநாடுகளில் இருந்து உறவினர்கள் வந்தால் உடனடியாக சுகாதார துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

அப்படி வரும் பயணிகள் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.  தும்மல் இருமல் வரும்போது கைக்குட்டையை பயன்படுத்த வேண்டும்.  ஒரு நாளைக்கு 15 முறையாவது கைகளை கழுவ வேண்டும்.  ஊராட்சி பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து குளோரின் கலந்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய வேண்டும்.  கிராம பகுதிகளில் குப்பை கழிவுநீர் தேங்காமல் உடனுக்குடனே அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் வட்டார சுகாதார மேற்பாா–்வையாளர்கள் ராஜேந்திரன், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து புதுச்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இருந்து கொரோனோ தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. இதில், மாணவ- மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Corona Awareness Camp ,New Year ,
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!