×

காட்டேரி ஊராட்சியில் நரிக்குறவர் காலனிக்கு குடிநீர் வழங்க ஏற்பாடு

ஊத்தங்கரை, மார்ச் 19:ஊத்தங்கரை அருகே காட்டேரி ஊராட்சியில் நரிக்குரவர் காலனிக்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து குடிநீர் வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.ஊத்தங்கரையை அடுத்த காட்டேரி ஊராட்சியில், நரிக்குறவ இன மக்கள் 100க்கும் மேற்பட்ட குடும்பமாக வசித்து வருகின்றனர். இம்மக்கள் பட்டா மற்றும் குடிநீர் வசதி கேட்டு ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய குழு தலைவரான உஷாராணி குமரேசனை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்ற அவர் ஒன்றிய பொது நிதி மற்றும் ஒன்றிய கவுன்சிலர் நிதி மூலம் நரிக்குறவ மக்கள் வசிக்கும் பகுதியில் ஆழ்துளை கிணறு மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க நிதி ஒதுக்கி பணிகளை தொடங்கி வைத்தார். தற்போது, ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டு வருவதால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பணிகளை திமுக ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம், ஆணையாளர்கள் அன்னபூரணி, அசோகன், ஒன்றிய கவுன்சிலர்கள் குமரேசன், கோவிந்தசாமி, ஊராட்சி மன்ற தலைவர் விஜயகுமார் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

Tags : Nerikkuravar ,Vampire Panchayat ,
× RELATED நாங்குநேரியில் குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்