×

இளம்பெண் மாயம் வாலிபர் மீது புகார்

கிருஷ்ணகிரி, மார்ச் 19:கிருஷ்ணகிரி அடுத்த கோதிகுட்லப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பழனிவேல். இவரது மனைவி கலைவாணி(24). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகளாகும் நிலையில் ஒரு மகன் உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கலைவாணி தனது தாய் வீடான கிருஷ்ணகிரி அடுத்த பாலிகானூருக்கு சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற கலைவாணி மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து கலைவாணியின் தாய் ரோஜா, கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகாரளித்தார். அந்த புகாரில் ஈரோடு மாவட்டம் பவானி தாலுகா வெள்ளபாளையம் கிராமத்தை சேர்ந்த ராஜ்பிரசாத்(26) என்பவர் எனது மகளை அழைத்து சென்றுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுத்து மகளை மீட்டு தர வேண்டும் என கூறியிருந்தார். இந்த புகாரை பெற்று கொண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) கணேஷ்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags : teenager ,
× RELATED காதல் திருமணம் ஒரு மாதத்திலேயே...