×

சூதாடிய 8 பேர் கைது ₹4,400 பறிமுதல்

போச்சம்பள்ளி, மார்ச் 19:மத்தூர் அடுத்துள்ள அத்திகானூர் பட்டாளம்மன் கோயில் அருகே, சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு 8 பேர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார்(35), சதீஷ்குமார் (32), சூர்யகணேஷ் (22), மகேந்திரன்(40), வெங்கட்ராமன்(34), கிருபாநந்தம்(28), கிருஷ்ணன்(34), ராஜா(42) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, 8 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ₹4,400 பணத்தை பறிமுதல் செய்தனர். 

Tags : gamblers ,
× RELATED சென்னை மாநகரப் பகுதியில் இன்று 565...