×

பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது

போச்சம்பள்ளி, மார்ச் 19:போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூரை சேர்ந்தவர் மாதேஷ். அவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக மத்தூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்ற போலீசார் அவரது கடையில் சோதனை நடத்தினர்.  சோதனையில், கடையில் ₹5,000 மதிப்பிலான குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை பறிமுதல் செய்த போலீசார், கடையின் உரிமையாளர் மாதேஷை கைது செய்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED ஊரடங்கு நேரத்திலும் ஸ்ரீபெரும்புதூர்...