உலக தமிழர் பாதுகாப்பு சங்கம் சார்பில் மகளிர் தினவிழா கொண்டாட்டம்

தஞ்சை, மார்ச் 18: தஞ்சை பெசண்ட் அரங்கில் உலக தமிழர் பாதுகாப்பு சங்கம் சார்பில் உலக மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. திக மாவட்ட தலைவர் அமர்சிங் தலைமை வகித்தார். சங்க நிறுவனர் இராம.பழனியப்பன், ஓய்வுபெற்ற காவல் கூடுதல் கண்கணிப்பாளர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தனர். கராத்தே முனுசாமி வரவேற்றார். சிறுநீரக சிகிச்சை நிபுணர் டாக்டர் மோகன்தாஸ் சிறப்புரையாற்றினார். தஞ்சை வேங்கடசாமி நாட்டார் கல்லூரி முதல்வர் இளமுருகன் வாழ்த்தினார்.

கூட்டத்தில் பல்வேறு சான்றோர் பெருமக்களுக்கு தமிழ் அறிஞர்கள் பெயரிலும், மகளிர் சாதனையாளர்கள் பெயரிலும் விருதுகள் வழங்கப்பட்டது.தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜிக்கு டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி விருதை முன்னாள் எம்எல்ஏ ரங்கசாமி வழங்கினார். மேலும் புதுக்கோட்டை சக்தி பெரியநாயகிக்கு வள்ளலார் விருது, திருக்குறள் நெறியை இலவசமாக மக்களிடையே பரப்பிவரும் அரிமா சீனி.மனோகரனுக்கு திருவள்ளுவர் விருது, ஈரோடு ஜெபமாலை ராஜனுக்கு பெரியார் பெருந்தொண்டன் விருது வழங்கப்பட்டது.

தஞ்சை ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரவீந்திரனுக்கு அண்ணா விருது, சமூக ஆர்வலர் குருங்குளம் ரவிக்கு சிறந்த சமூக சேவகர் விருதும் வழங்கப்பட்டது.இதையடுத்து அம்மன்பேட்டை முத்து குழுவினரின் சிலம்பாட்ட நிகழ்ச்சி, புதுகை இளம் நாட்டிய சுடரொளி ஜனனியின் பரதநாட்டிய நிகழ்ச்சி, நகைச்சுவை தென்றல் தஞ்சை இந்துமணியின் சிறப்பு மெல்லிசை நிகழ்ச்சி நடந்தது. கோவை சக்தி சிவானந்தம் நன்றி கூறினார். ஓய்வுபெற்ற காவல்துறை உதவி ஆய்வாளர் அருளானந்தம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். விடுதலை வேந்தன், அமெரிக்கா கோவிந்தராஜ், வெங்கடேஷ், புதுகை பரதநாட்டிய ஆசிரியர் சுந்தர் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Related Stories: