×

பைக்குகள் மோதலில் கல்லூரி மாணவர் பலி

ஒரத்தநாடு, மார்ச் 18: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா பாளாம்புத்தூர் குடிக்காடு கிராமத்தை சேர்ந்த சுரேந்திர குமார் மகன் அபிஷேக் (21).
இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை அபிஷேக் தனது நண்பர் ஒருவருடன் மோட்டார் சைக்கிளில் ஒரத்தநாட்டில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ள பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே 2 பேர் வந்த இன்னொரு டூவீலர், இவர்களது பைக்கில் மோதியது. இதில் படுகாயமடைந்த அபிஷேக்கை தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் செல்லும் வழியிலேயே இறந்தார். மற்ற 2 பேரும் படுகாயத்துடன் தஞ்சை, திருச்சி தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
இதுகுறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : College student ,
× RELATED காட்பாடியில் கல்லூரி மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி