×

கொரோனா எதிரொலி பொய்கை மாட்டு சந்தைக்கு வரத்து குறைந்தது ₹40 லட்சத்துக்கு விற்பனை

வேலூர், மார்ச் 18: கொரோனா அச்சம் காரணமாக பொய்கை மாட்டுச்சந்தையில் மாடுகள் வரத்து குறைந்துள்ளது. வேலூர் பொய்கை மாட்டுச்சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நடைபெறும், இதில், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திரா மாநிலம் சித்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களது பசுக்கள், உழவுத் தொழிலுக்கு பயன்படுத்தப்படு எருதுகள் ஆகியவற்றை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். காலை 6 மணிக்கு தொடங்கும் வியாபாரம் மதியம் 12 மணி வரை நடைபெறும். இதில், நாட்டு பசுக்கள், எருதுகள், கலப்பின பசுக்கள் ஆகியவை விற்பனை செய்யப்படும். சென்னை, விழுப்புரம் உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து வியாபாரிகள் சந்தையில் விற்பனை செய்யப்படும் மாடுகளை தரம் பார்த்து வாங்கிச் செல்கின்றனர். வார்ந்தோறும் ₹50 லட்சம் முதல் ₹1 கோடி வரை மாடுகள் விற்பனை செய்யப்படும்.

இந்நிலையில், ெகாரோனா எதிரொலியாக நேற்று நடந்த பொய்கை மாட்டுச்சந்தையில் குறைந்த அளவிலேயே கால்நடைகள் விற்பனைக்கு வந்தன. பசு, எருது மாடுகள் ₹40 லட்சம் வரை விற்பனையானது.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘கொரோனா அச்சம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் குறைந்த அளவிலேயே கால்நடைகள் விற்பனைக்கு வந்தன. இதேநிலை நீடித்தால் இனி வரும் வாரங்களில் பொய்கை சந்தையில் விற்பனை குறைவே வாய்ப்பு உள்ளது’

Tags : Corona Echo Lie ,
× RELATED சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணம்...