×

விவசாயிகள் குறைதீர் கூட்டம் ரத்து

அரியலூர், மார்ச் 18: அரியலூரில் நடக்கவிருந்த விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் கொரோனா வைரஸ் நோய் பரவுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே கொரோனா வைரஸ் நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அரியலூரில் மார்ச் மாதம் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அரியலூர் கலெக்டர் ரத்னா தெரிவித்துள்ளார்.

Tags : meeting ,
× RELATED விவசாயிகளுக்கு பயிற்சி