×

கலெக்டர் அறிவுறுத்தல் குடியிருப்பு வாசிகள் எதிர்பார்ப்பு விறகு அடுப்பில் சமையல் செய்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி பரிதாப சாவு

தோகைமலை, மார்ச் 18: தோகைமலை அருகே விறகு அடுப்பில் சமைத்தபோது சேலையில் தீப்பிடித்து மூதாட்டி உடல் கருகி பலியானார். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கழுகூர் ஊராட்சியில் உள்ள ஈச்சங்காட்டுபட்டி அண்ணாநகரை சேர்ந்தவர் சிறும்பாயி அம்மாள் (75). இவர் தனது வீட்டில் சமையல் செய்வதற்காக விறகு அடுப்பை பற்ற வைக்க மண்ணெண்ணயை ஊற்றி அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராத விதமாக சிறும்பாயி அம்மாள் சேலையில் தீ பற்றி பலத்த காயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக மருத்துவர் பரிந்துரையின் பேரில் அங்கிருந்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறும்பாயி அம்மாளுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி சிறும்பாயிஅம்மாள் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் பழனியப்பன் தோகைமலை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Collector ,Salem ,
× RELATED தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில்...