கொளுத்தும் வெயிலால் குறையும் நிலத்தடி நீர்

தேவதானப்பட்டி, மார்ச் 18: கொளுத்தும் வெயிலால், தேவதானப்பட்டி பகுதியில் நிலத்தடி நீர் குறைந்து கிணறு, குளங்கள், கண்மாய்களில் நீர்மட்டம் குறைந்து விவசாயப் பணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், கண்மாய்களில் தண்ணீர் வற்றி வறண்டு வருகிறது. இதன் காரணமாக நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்துள்ளது. இதனால், குளங்கள், கண்மாய்கள், கிணறுகளில் நீர்மட்டம் குறைந்துள்ளது.

Advertising
Advertising

இதனால், கோடை கால சாகுபடியை மேற்கொள்ள விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். தற்போது ஜெயமங்கலம், மேல்மங்கலம், சில்வார்பட்டி, நல்லகருப்பன்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி உள்ளிட்ட இடங்களில் நெல் அறுவடை பணி முடிந்து உழவு பணியினை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வெயில் கொளுத்தி வருவதாலும், நிலத்தடி நீர் குறைந்து வருவதாலும் கோடை சாகுபடிக்கு விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். கோடை மழை பெய்தால் விவசாயப் பணிகள் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: