×

விபத்தில் 3 பேர் காயம்

பெரியகுளம், மார்ச் 18: பெரியகுளம் அருகே உள்ள டி.கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் முத்துச்செல்வம் (20). இவர், தனது ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு, பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறைக்கு செல்லும் வழியில், சின்னம்பாளையம் பிரிவு அருகே, வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற டூவீலர் ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் ஆட்டோவில் சென்ற டி.கள்ளிப்பட்டியை சேர்ந்த விஸ்வநாதன் (40), முத்துக்காளை (23) ஆகியோர் மற்றும் டூவீலர் ஓட்டி வந்த பெரியகுளத்தை சேர்ந்த அபுதாகிர் (40) படுகாயம் அடைந்தனர். காயமடைந்த 3 பேரும் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags : accident ,
× RELATED சீனாவுக்கு உளவு பார்த்த பத்திரிகையாளர் உட்பட 3 பேர் டெல்லியில் கைது