×

மதுப்பாட்டில் வைத்திருந்தவர் கைது

பெரியகுளம், மார்ச் 18: பெரியகுளம் அருகே, அனுமதியின்றி விற்பனைக்காக மதுபாட்டில் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
பெரியகுளம் தென்கரை காவல்நிலைய சப்இன்ஸ்பெக்டர் அசோக் தலைமையிலான போலீசார், பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள கண்மாய் அருகே, அரசு அனுமதியின்றி விற்பனைக்காக மதுபாட்டில்கள் வைத்திருந்த கைலாசப்பட்டியைச் சேர்ந்த கதிரவன் (42) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 9 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED முதியவரிடம் வழிப்பறி