கை கழுவிட்டு வந்தால்தான் வீட்டு வரி கட்ட முடியும் செயல் அலுவலர் அதிரடி

சின்னாளப்பட்டி : சின்னாளப்பட்டி பேரூராட்சி அலுவலகத்திற்கு தினமும் குடிநீர் வரி, வீட்டுவரி, சான்றிதழ் வாங்குவதற்காக வரும் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள தண்ணீரை எடுத்து, சோப், மஞ்சள் பொடி மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும். பின்பு டிஸ்யூ பேப்பரில் கைகளை துடைத்த பின்பே பேரூராட்சி அலுவலகத்திற்கு வர வேண்டும். அப்போதுதான் வரிகளை கட்டலாமென அறிவுறுத்தி உள்ளது. அதன்பிறகே அலுவலகத்திற்குள் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். இதற்கு மக்களிடமும் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும், விழிப்புணர்வு பிரசுரங்களையும் வழங்கி வருகிறது.

Advertising
Advertising

இதுகுறித்து செயல் அலுவலர் கலையரசி கூறுகையில், ‘‘கலெக்டர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குநரின் உத்தரவுப்படி, பேரூராட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும், சுகாதார பணிகளுக்கு சென்றுவிட்டு திரும்பும் துப்புரவு பணியாளர்களும் காலை, மதியம், மாலை என மூன்று வேலைகளிலும் கைகளை சுத்தம் செய்யச்சொல்லி அறிவுறுத்தி வருகிறோம்’’ என்றார்.

Related Stories: