×

சிறைக்கைதிகளை உறவினர்கள், வக்கீல்கள் சந்திக்க 2 வாரம் தடை

நாகர்கோவில், மார்ச் 18: குமரி மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலைகளில் உறவினர்கள், வழக்கறிஞர்கள் கைதிகளை சந்தித்து நேர்காணல் செய்திடும் நடவடிக்கைகள் 2 வார காலத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவு சிறைகளில் அறிவிப்பு பலகையிலும் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. அதில், ‘கொரோனா வைரஸ் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உறவினர்கள் நேர்காணல் மற்றும் வழக்கறிஞர்கள் நேர்காணல் மார்ச் 17ம் தேதி முதல் இரு வார காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை போன்று தமிழகத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறை மற்றும் தமிழகத்தில் உள்ள பிற சிறைச்சாலைகளிலும் இதே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Relatives ,prisoners ,lawyers ,
× RELATED வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச...