×

விருத்தாசலம் ரயில் நிலையத்தில் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

விருத்தாசலம், மார்ச் 18: சென்னையில்இருந்து திருச்சி, மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட பல பகுதிகளுக்கு விருத்தாசலம் ரயில் நிலையம் வழியாக ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. மேலும் விருத்தாசலத்தில் இருந்து கடலூர் மற்றும் சேலம் மார்க்கத்திலும் ரயில் போக்குவரத்து நடைபெற்று வருவதால் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பயணிகள் விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.  

இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் விருத்தாசலம் ரயில்வே இருப்பு பாதை போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர். அதில் விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு வந்த பயணிகள் மற்றும் அப்பகுதி வழியாக சென்ற ரயிலில் சென்ற பயணிகளுக்கு வைரஸ் நோயின் அறிகுறிகள், நோய் பரவும் விதம், நோய் தடுப்பு நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள், சுற்றுலா மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு தேவையான அறிவுரைகள், கை கழுவும் முறைகள் ஆகியவை குறித்து விழிப்புணர்வை ஏற்
படுத்தினார்கள்.

ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் சின்னப்பன் தலைமையில் ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சுமித் முன்னிலையில், சப் இன்ஸ்பெக்டர் மகாலிங்கம், காவலர்கள் சாமுண்டீஸ்வரி, லாவண்யா, உதயக்குமார், ரங்கநாதன், ஜெகநாதன், தனிப்பிரிவு போலீசார் கணேசன், ராம்குமார், ரயில்வே மருத்துவமனை டாக்டர் ராஜகோபால், சுகாதார ஆய்வாளர் அசோக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

Tags : Vruthachalam Railway Station ,
× RELATED விருத்தாசலம் ரயில் நிலையத்தில் திருச்சி கோட்ட மேலாளர் ஆய்வு