×

ரேஷன்,சத்துணவு பணியாளர் சங்க போராட்டங்கள் ஒத்திவைப்பு

கடலூர் , மார்ச் 18:  ரேஷன், சத்துணவு பணியாளர் சங்க  மாநில சிறப்பு தலைவர்  கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் செய்தியாளர்களிடம்
கூறியது, ரேஷன் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களின் 30 கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (18ம் தேதி) தமிழகம் முழுவதும் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் 7 மையங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக கூட்டுறவு சங்க மாநில பதிவாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும், இதில் எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடாததால் பேச்சுவார்த்தை முறிந்தது. ஆனாலும், கொரோனா பாதிப்பு காரணமாக மறியல் போராட்டத்தை கைவிட முடிவு செய்துள்ளோம். ஆனால், திட்டமிட்டப்படி மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம் நடைபெறும்.இதேபோன்று, சத்துணவு பணியாளர்கள் சங்கம் சார்பில் சத்துணவு மானியக் கோரிக்கை நடைபெறும் 21ஆம் தேதி சென்னையில் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தோம். இப்போராட்டமும் ஒத்தி வைக்கப்படுகிறது
என்றார்.

Tags :
× RELATED ஓபிஎஸ் பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சி திடீர் ஒத்திவைப்பு