×

மர்மநோய் தாக்கியதா? அரசு கலை கல்லூரியில் பெரியார் சிறப்பு சொற்பொழிவு


பெரம்பலூர், மார்ச் 13: பெரம்பலூர் அருகே குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மையம், பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை சார்பில் பெரியார் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் உயராய்வு மைய இயக்குனர் (பொ) கோவிந்தராஜன் வரவேற்றார். பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி முதல்வர் கணேசன் தலைமை வகித்தார். திருச்சி புனித ஜோசப் கல்லூரி முன்னாள் தமிழ் ஆய்வுத்துறையின் துறைத்தலைவரும், இணை பேராசிரியருமான செல்வக்குமாரன் சிறப்புரையாற்றினார். பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

Tags : Periyar Special Lecture ,Government Arts College ,
× RELATED மூட்டைக்கு 4 கிலோ வரை குறையும் மர்மம்...