×

ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி

ஊத்துக்கோட்டை, பிப். 28: எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையத்தில்  அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் ஊராட்சியில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.  இதில் அதிமுக எல்லாபுரம்  ஒன்றிய அவைத்தலைவர் விஜயன் தலைமை தாங்கினார். எல்லாபுரம் ஒன்றிய குழு தலைவர் ரமேஷ், துணைத்தலைவர் சுரேஷ், ஊராட்சி துணைத்தலைவர் மகேஷ்,  முன்னாள் ஊராட்சி துணைத்தலைவர்கள்  கேசவன், சீனிவாசன், நிர்வாகிகள்  சுந்தர்ராஜ், பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக  கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் கோபால் நாயுடு  உள்ளிட்டோர் கலந்துகொண்டு 1000 பேருக்கு புடவை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இந்த விழவில் கூட்டுறவு சங்க தலைவர் சந்திரசேகர், ராஜா, ஒன்றிய கவுன்சிலர்கள் லதா அசோக், வித்யாலட்சுமி வேதகிரி, ஏகாம்பரம், ரமேஷ், குமார், முரளி, தேவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Jayalalithaa Birthday Celebration ,
× RELATED ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் 1000 பெண்களுக்கு சேலை