×

டீக்கடையில் பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் செயின் பறிப்பு

ஆலங்குளம், பிப். 28: ஆலங்குளம் அருகே நாலங்குறிச்சி யை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (46). இவர், வீட்டினருகே டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று அதிகாலை கோபால கிருஷ்ணன் மனைவி பிச்சம்மாள் (45), கடையில் இருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர், திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் பிச்சம்மாளின் கழுத்தில் கிடந்த 50 கிராம் செயினை பறித்து கொண்டு தப்பினர். இதன் மதிப்பு ரூ.1.50 லட்சம் இருக்கும். இதுகுறித்து பிச்சம்மாள் சீதபற்பநல்லூர் போலீசில் புகார் செய்தார்.

இதேபோல் ஆலங்குளம் புதுப்பட்டி ரோட்டில், வீட்டின் முற்றம் தெளித்து கொண்டிருந்த சக்தியம்மாள் (72) என்ற மூதாட்டியிடம் பைக்கில் வந்த நபர்கள், அவர் அணிந்திருந்த கவரிங் செயினை பறித்துச் சென்றனர். இந்த இரு சம்பவங்களிலும் ஈடுபட்டது ஒரே நபர்களா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Lakh Chain ,
× RELATED ராமநாதபுரம் அருகே போலீஸ் ஜீப் மோதி நடந்து சென்ற பெண் உயிரிழப்பு