×

ஐன்ஸ்டீன் கல்லூரியில் மாநில கருத்தரங்கு

நெல்லை,பிப்.28:சீதபற்பநல்லூர் ஐன்ஸ்டீன் பொறியியல் கல்லூரியில் ‘ஐன்ஸ்டீனியம்-2020’ என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கு நடந்தது. கல்லூரி நிர்வாக அறங்காவலர் அமுதவாணன், செயலாளர் எழில்வாணன், கல்லூரி முதல்வர் வேலாயுதம், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் அருள்ராஜ் ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். இயந்திரவியல் துறை மாணவர் சங்க தலைவர் ராகுல் வரவேற்றார்.

பல்வேறு துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ- மாணவிகள் மற்றும் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கணினி அறிவியல் துறை தலைவி பாத்திமா ஷெரின், கல்லூரியின் பல்வேறு துறை மாணவர் சங்கங்களின் செயல்பாடுகளை எடுத்துரைத்தார். கட்டிடவியல் துறை மாணவி ஜெனிபர் ‘ஐன்ஸ்டீனியம்-2020’ நிகழ்ச்சி குறித்து பேசினார். தொடர்ந்து துறைகள் சார்பில் நடந்த போட்டிகளில் மாணவர்கள் பங்கேற்று பரிசுகளை வென்றனர். மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை மாணவர் கோமதி ராஜசங்கர் நன்றி கூறினார்.

Tags : State Seminar ,Einstein College ,
× RELATED ஐன்ஸ்டீன் கல்லூரியில் அறிவியல் திறன் மேம்பாட்டு போட்டிகள்