×

தென்காசி ஜோதிடரின் ஆராய்ச்சி நூல்கள் வெளியீட்டு விழா

நெல்லை, பிப். 28: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 72வது பிறந்த நாள் விழாவையொட்டி உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் தென்காசியை சேர்ந்த ஜோதிடர் மாடசாமி எழுதிய நூல்கள் உள்ளிட்ட 72 அரிய நூல்கள் மற்றும் 138 ஆராய்ச்சி நூல்கள் வெளியீட்டு விழா நடந்தது.
சென்னையில் நடந்த விழாவில் தென்காசி ஜோதிடர் மாடசாமி எழுதிய காலக்கணித தோற்றமும், வளர்ச்சியும் என்ற நூலை உலக தமிழாராய்ச்சி நிறுவன தலைவரும், தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சருமான பாண்டியராஜன் வெளியிட்டார்.

இதன் முதல் பிரதியை தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் வளர்மதி பெற்றுக்கொண்டார். நூலாசிரியர் மாடசாமியை தமிழ் ஆராய்ச்சித் துறை இயக்குநர் விஜயராகவன், திருமூலர் ஆய்வறிக்கை தலைவர் மகாலட்சுமி, தமிழாராய்ச்சி நிர்வாக அதிகாரி செழியன், திருவள்ளுவர் கல்வியியல் டிரஸ்ட் செயலாளர் செல்வகணேஷ், பொருளாளர் புதுக்குடி சங்கர், துணை அமைப்பாளர் முருகேசன், அவைத்தலைவர் ஆலங்குளம் சங்கர், தென்காசி சுடலையாண்டி ஜோதிடர், நாகர்கோயில் முத்துராஜ் ஜோதிடர், வேளாண் துறை இயக்குநர் முத்துசாமி, தென்மாவட்ட திருவள்ளுவர் நலச்சங்கத் தலைவர் ஆனந்தன், செயலாளர் மாணிக்கம், ரோட்டரி சங்க முன்னாள் உதவி ஆளுநர் மாரிமுத்து மற்றும் நண்பர்கள் பாராட்டினர்.  ஜோதிடர் மாடசாமி ஏற்கனவே நலம் தரும் நட்சத்திர விருட்சகங்கள் என்ற தலைப்பில் ஒரு நூலும், ஜோதிட பட்டதாரிகளும் கோள்களின் தாக்கமும் என்ற தலைப்பில் இரு நூல்கள் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Tenkasi ,astrologer ,
× RELATED கொரோனா வராமல் தடுப்பது குறித்தும் புத்தகம்: சீனா வெளியீடு