×

சிறுமியிடம் சில்மிஷம்; போக்சோவில் போதகர் கைது

வள்ளியூர், பிப். 28:  வள்ளியூர் அருகே உள்ள ஒரு ஜெப கூடத்தில் மத போதகராக இருப்பவர் செல்வராஜ் (54). இவர், இதே பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் ஜன.16ம் தேதிகளில் சிறுமிக்கு தின்பண்டங்கள் கொடுத்து சில்மிஷம் செய்துள்ளார். சம்பவத்தன்று சிறுமியை பெற்றோர், ஆலயத்துக்கு அழைத்த போது அவர் வர மறுத்து போதகரின் செயல் குறித்து கூறியுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார், வள்ளியூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து போதகர் செல்வராஜை  கைது செய்தனர்.

Tags : pastor ,
× RELATED போலீசார் மறுத்ததால் ஆம்புலன்சில் குழந்தை பெற்ற பீகார் பெண்