×

வயலில் மலைப்பாம்பு சிக்கியது

கடையம், பிப். 28: கடையம் அருகே மந்தியூரில் சாகுல் ஹமீது என்பவருக்கு சொந்தமான வயல் உள்ளது. இதில் நெல் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த வயலில் பாம்பு கிடப்பதாக கடையம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. கடையம் வனச்சரக அலுவலர் நெல்லைநாயகம் உத்தரவுப்படி வேட்டை தடுப்பு காவலர்கள் வேல்ராஜ், சக்தி முருகன் ஆகியோர்  சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு பதுங்கியிருந்த 12 நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்து இலுப்பையாறு பீட் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு விட்டனர்.

Tags : field ,
× RELATED பொன்னமராவதி அருகே வைக்கோல் போரில் 12 அடி மலைப்பாம்பு பிடிபட்டது