9 பேர் காயம் சாலையை ஆக்கிரமித்து இருந்த காந்தி மார்க்கெட் தரைக்கடைகள் அகற்றம்

திருச்சி, பிப். 28: திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து இருந்த தரைக்கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளை நேற்று மாநகராட்சி அதிகாரிகள் போலீசாருடன் இணைந்து அகற்றினர். திருச்சி காந்தி மார்க்கெட் ஆர்ச் முதல் அஞ்சுமன் பஜார் வரையிலான பகுதியில் தள்ளுவண்டிகள், தரைக்கடைகளால் அப்பகுதியில் பெரிதும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் தினமும் நெரிசலில் வாகனங்கள் சிக்கி தவித்து வந்தது. இது குறித்து மாநகராட்சி மற்றும் மாநகர காவல்துறைக்கு புகார்கள் சென்ற வண்ணம் இருந்தது. இதில் கடந்த வாரம் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள தள்ளுவண்டி கடைகளை அப்புறப்படுத்த வந்த உத்தரவை அடுத்து காந்தி மார்க்கெட் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் அப்புறப்படுத்தினர். இதனால் ஓரளவிற்கு போக்குவரத்து நெரிசில் இன்றி வாகனங்கள் சென்று வந்தது.

இந்நிலையில் காந்தி மார்க்கெட் ஆர்ச் முதல் அஞ்சுமன் பஜார் வரையிலான தரைக்கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகளை நேற்று மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் இணைந்து அப்புறப்படுத்தினர். மாநகராட்சி உதவி பொறியாளர் திருஞானம் தலைமையில் இளநிலை பொறியாளர் பரசுராம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் பொக்லின் கொண்டு அப்புறப்படுத்தினர். இதில் அசம்பாவித சம்பவம் தடுக்கும் வகையில் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தொடர்ந்து 30க்கும் மேற்பட்ட தரைக்கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு எதிரே உள்ள சைக்கிள் ஸ்டாண்டில் இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் சைக்கிள் ஸ்டாண்ட் சார்பில் ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தினை தரைக்கடைகள் அமைத்து கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Related Stories: