×

திமுக தேர்தல் படிவம் வழங்கல்

திண்டிவனம், பிப். 28: திண்டிவனத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்டம் ஒலக்கூர் மேற்கு ஒன்றியத்திற்கு  உட்பட்ட அனைத்து ஊர் மற்றும் உட்கிளைகளில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்கான படிவங்கள் வழங்கப்பட்டது. மேலும் புதிய கிளை அமைப்பதற்கான கருத்துக்களை மாவட்ட செயலாளர் அப்பகுதி நிர்வாகிகளிடம் கேட்டறிந்தார்.

திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடு பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் மஸ்தான் எம்எல்ஏ தலைமை தாங்கி, ஒலக்கூர் மேற்கு ஒன்றிய திமுக நிர்வாகிகள், ஊராட்சி செயலாளர்கள், பிரதிநிதிகள் மற்றும் திமுக நிர்வாகிகளுக்கு தேர்தல் படிவங்களை வழங்கினார். இதில் மாசிலாமணி எம்எல்ஏ, ஒன்றிய செயலாளர் ராஜாராம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Election ,DMK ,
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து?: அதிகாரிகளிடம் கருத்து கேட்கிறது அரசு