×

கடம்பூரில் நாளை ஜல்லிக்கட்டு

கெங்கவல்லி, பிப்.28: கடம்பூரில் நாளை ஜல்லிக்கட்டு நடக்க உள்ளதை முன்னிட்டு, நேற்று முன்னேற்பாடு பணிகளை ஆத்தூர் ஆர்டிஓ, டிஎஸ்பி நேரில் ஆய்வு செய்தனர். கெங்கவல்லி அருகே கடம்பூர் ஊராட்சியில், நாளை(29ம் தேதி) ஜல்லிக்கட்டு விழா நடக்க உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியர் துரை, ஆத்தூர் டிஎஸ்பி ராஜூ ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில் முடிக்கப்படாத பணிகளை விரைந்து முடிக்கவும், ஜல்லிக்கட்டு போட்டியை காண வரும் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி, கால்நடை பரிசோதனை நிலையம், மாடுபிடி வீரர்களை பரிசோதனை செய்ய முகாம் அமைக்கவேண்டும் உள்ளிட்ட அறிவுரைகளை விழா குழுவினரிடம் ஆத்தூர் ஆர்டிஓ துரை வழங்கினார்.

ஜல்லிக்கட்டு விழாவில் திருச்சி, பெரம்பலூர், லால்குடி, ஜெயங்கொண்டம், நாமக்கல், உலிபுரம், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கெங்கவல்லி, கச்சராபாளையம், சின்னசேலம், ஆத்தூர் ஆகிய ஊர்களில் இருந்து 600 மாடுகள் மற்றும் 600 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். ஆய்வின்போது கெங்கவல்லி தாசில்தார் சிவக்கொழுந்து, கெங்கவல்லி இன்ஸ்பெக்டர் (பொ) ராம் ஆண்டவர், ஜல்லிக்கட்டு விழா குழு தலைவர் லோகநாதன், கிராம நிர்வாக அலுவலர் துரை மற்றும் வருவாய் துறையினர் கலந்து கொண்டனர்.

Tags : Kadampur ,
× RELATED தண்ணீர் தேடி அலைந்தபோது குழியில்...