×

மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் விநியோகம்

நாமக்கல், பிப்.28: நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ,மாணவிகள், கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் மெகராஜ்  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம், ஐஐஐடி, என்ஐடி, மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டிற்கு ₹2 லட்சம் வரை கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பம் கலெக்டர்  அலுவலகத்தில்உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுகொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED ரேஷன் கடைகளில் ரூ.1000 நிவாரணத்தொகை...