×

மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி கூட்டம்

திருச்செங்கோடு, பிப்.28: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி  கூட்டம் நாளை நடக்கிறது. இதுகுறித்து மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதுரா செந்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி கூட்டம், திருச்செங்கோடு -வேலூர் ரோட்டில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் நாளை(29ம் தேதி) காலை 10 மணிக்கு நடக்கிறது. மாவட்டசெயலாளர் மூர்த்தி எம்எல்ஏ தலைமை தாங்குகிறார். மார்ச் 1ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது, இளைஞரணியினருக்கான புதிய அடையாள அட்டையை அனைவருக்கும் கொண்டு செல்ல புதிய பொறுப்பாளர்களை நியமிப்பது,  டிசிஎல் கிரிக்கெட் மைதான திறப்பு விழா போன்றவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. எனவே, இக்கூட்டத்தில் நகர, ஒன்றிய, பேரூர் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Tags : Western District ,DMK Youth Meeting ,
× RELATED மேற்கு மாவட்ட திமுக சார்பில் 1 லட்சம் கொரோனா விழிப்புணர்வு நோட்டீஸ்