×

வீடு புகுந்து விவசாயி மீது தாக்குதல்

நாமக்கல், பிப்.28: நாமக்கல் அருகே வரகூர் மூலக்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ்(60). விவசாயியான இவர், எருமப்பட்டி காவல்நிலையத்தில் ஒரு புகார் தெரிவித்துள்ளார். அதில், கடந்த 2 ஆண்டுக்கு முன்பு பவித்திரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்காந்த் என்பவருக்கு சொந்தமான வீடு, கடையை  ₹65.45 லட்சத்துக்கு கிரையம் செய்தேன். அதைத்தொடர்ந்து, ரமேஷ்காந்த் வீட்டை காலி செய்து கொடுத்து விட்டு சென்றுவிட்டார். இந்நிலையில், மீண்டும் ₹30 லட்சம் கேட்டு ரமேஷ்காந்த் தொடர்ந்து மிரட்டி வந்தார். கடந்த 22ம் தேதி நான் வீட்டில் இருந்த போது,  ரமேஷ்காந்த் மற்றும் சிலர் எனது வீட்டுக்குள் புகுந்து என்னை தாக்கினர். பின்னர், கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு சென்றுவிட்டனர் என தெரிவித்துள்ளார்.இதன்பேரில், எருமப்பட்டி எஸ்ஐ வேலுசாமி  விசாரணை நடத்தி, ரமேஷ்காந்த், கங்கேஸ்வரி, அன்பழகன், இமயவரம்பன், மாணிக்கம் உள்ளிட்ட 9 பேர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED திருச்சியில் வாழைத்தார் விலை வீழ்ச்சி காரணமாக விவசாயி தற்கொலை