×

மசினகுடி,கல்லட்டி வழியில் இரவில் வாகனம் செல்ல அனுமதிக்க கோரிக்கை

ஊட்டி,பிப்.28:  பொக்காபரம் மாரியம்மன் கோயில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழாவைெயாட்டி இரு நாட்கள் கூடலூர்-மசினகுடி, ஊட்டி-மசினகுடி  சாலையில் வாகனங்கள் செல்ல அனுமதி வழங்குவது குறித்து மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படாததால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகேயுள்ள மசினகுடி பொக்காபுரம் மாரியம்மன் கோயில் திருவிழா ஆண்டு தோறும் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவினை காண நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பிற பகுதிகள், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இதனால், பக்தர்களின் வசதிக்காக இங்கு மாவட்ட நிர்வாகம், இந்து அறநிலைத்துறை மற்றும் சோலூர் பேரூராட்சி சார்பில் பல்வேறு வசதிகள் செய்து தரப்படுகிறது. போக்குவரத்து கழகம் மூலம் ஊட்டி மற்றும் கூடலூர் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இம்முறையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து கழகம் மும்மரமாக செய்து வருகிறது.

வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி ஊட்டி - மைசூர் சாலையில் தொரப்பள்ளி ேசாதனைச்சாவடியில் இருந்து முதுமலை செல்லவும், அதேபோல் ஊட்டி - மசினகுடி சாலையில் கல்லட்டி சோதனைச்சாவடி வழியாக இரவு நேரங்களில் செல்ல தடையுள்ளது. ஆனால், வழக்கமாக பொக்காபுரம் கோயில் திருவிழாவின் போது, பக்தர்களின் வசதிக்காக திருவிழா நடக்கும் இரு நாட்கள் மட்டும் ஊட்டி - மைசூர் சாலையில் இரவு நேரங்களில் செல்ல உள்ள தடை, தளர்த்தப்பட்டு முதுமலை புலிகள் காப்பகம் வழியாக (தெப்பக்காடு - கூடலூர், மசினகுடி - பொக்காரபுரம்) சாலையில் 24 மணி நேரமும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படுவது வழக்கம். இன்று விழா கொடியேற்றத்துடன் துவங்கும் நிலையில், 2ம் தேதி முக்கிய விழாவான தேர் திருவிழா நடக்கிறது. அன்றைய தினம் பல ஆயிரம் பக்தர்கள் கோயிலுக்கு செல்வது வழக்கம். பெரும்பாலான பக்தர்கள் இன்று முதலே முதலே கோயிலுக்கு சென்று, அங்கு அன்னதானம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்வார்கள்.  

பொதுவாக தேர் திருவிழா நடக்கும் முந்தைய நாள் மற்றும் தேர் நடக்கும் நாட்களில் மட்டும் 24 மணி நேரமும், கூடலூர் - முதுமலை சாலையில் பக்தர்கள் வாகனங்கள் மற்றும் அரசு பஸ்கள் செல்ல அனுமதி வழங்கப்படுவது வழக்கம். ஆனால், நாளை முதல் விழா பக்தர்கள் அதிகளவு செல்லும் நிலையில், இதுவரை இவ்வழித்தடத்தில் வாகனங்கள் செல்ல அனுமதிப்பது தொடர்பான அறிவிப்பு எதுவும் மாவட்ட நிர்வாகமோ அல்லது வனத்துறையோ வெளியிடப்படவில்லை. பொதுவாக தேர் திருவிழா நடக்கும் சமயங்களில் இரவு நேரங்களில்தான் அதிகளவு பக்தர்கள் இச்சாலைகளில் செல்வது வழக்கம். அதேபோல், போக்குவரத்து கழகமும். ஊட்டியில் இருந்து மசினகுடிக்கு கூடலூர் வழியாகவும், கல்லட்டி சோதனை சாவடி வழியாகவும் பஸ்களை இயக்கும். ஆனால், இதுவரை அறிவிப்பு வெளியாகாத நிலையில், பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Tags : Kallatti ,
× RELATED கல்லட்டி மலை பாதையில்...