நாயர்ஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி

கோவை, பிப்.28: கோவை துடியலூர் என்.ஜி.ஜி.ஓ. காலனியில் நாயர்ஸ் வித்யா மந்திர் பள்ளி மாணவர்கள் அரசூர் விவேகானந்தா பப்ளிக் பள்ளியில் மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்றனர். இதில் மாணவர்கள் அஜய்குமார், கெவின், அமர்நாத், ஆசிப் முகமது ஒரு வெள்ளி பதக்கம், 3 வெண்கல பதக்கம் வென்றனர். கடந்த 23ம் தேதி நல்லாம்பாளையத்தில் மாவட்ட அளவிலான யோகாசன போட்டி நடந்தது.

இதில் நாயர்ஸ் பள்ளி மாணவர்கள் 3 தங்கம், 21 வெள்ளி, 7 வெண்கல பதக்கம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை  பள்ளி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

Advertising
Advertising

Related Stories: