துப்புரவு தொழிலாளிக்கு பாலியல் தொல்லை

கோவை, பிப்.28: கோவை உக்கடம் சி.எம்.சி காலனியை சேர்ந்தவர் ஜோதி (40). இவருக்கு திருமணமாகி மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பிளம்பராக பணியாற்றுகிறார். கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவு தலைவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன் தினம் நள்ளிரவு இவர் மருத்துவமனை வளாகத்தில் பணியில் இருந்தார்.
Advertising
Advertising

அப்போது சிங்காநல்லூரை சேர்ந்த கணவரை இழந்த 33 வயது பெண் துப்புரவு தொழிலாளி ஒருவர் சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அவர் வேலை செய்த போது அங்கே வந்த ஜோதி, அந்த பெண்ணின் கன்னத்தில் முத்தம் கொடுத்து பாலியல் ரீதியாக அத்துமீறி நடக்க முயன்றார். இதிற்கு எதிர்ப்பு காட்டிய அந்த பெண்ணை கையால் தாக்கினார். இதில் அதிர்ச்சியடைந்த அந்த பெண் கூச்சலிட்டார். அப்போது வளாகத்தில் இருந்த பணியாளர்கள் திரண்டு வந்து ஜோதியை மடக்கி பிடித்து சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பெண்கள் வன் கொடுமை, அத்துமீறல், கொலை மிரட்டல் பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஜோதி கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Related Stories: