சென்னையில் த.பெ.திகவினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவை, பிப்.28: சென்னையில் த.பெ.தி.கவினர் 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை கண்டித்து நேற்று கோவையில் அனைத்துகட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு த.பெ.தி.க பொதுசெயலாளர் கு.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் சென்னையில் நடந்த  துக்ளக் இதழின் 50ஆம் ஆண்டு விழாவில் விழாவில் பங்கேற்றிருந்த நடிகர் ரஜினிகாந்த்  பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவு செய்திருந்தார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து பல அமைப்புகள் ரஜினியின் வீடு, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதில் தபெதிகவினர் 10 பேர் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாக வழக்கு பதிவு செய்யபட்டு கைது செய்யபட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதை ரத்து செய்ய வேண்டும், தமிழக அரசு உடனே இந்த வழக்கை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்  நடத்தப்பட்டது. இதில் த.பெ.தி.க, எஸ்.டி.பி.ஐ, வி.சி.கே, தமிழ்புலிகள், ஏ.ஐ.சி.சி.டி.யு, சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்கம், மே 17 இயக்கம், தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட அமைப்பு மற்றும் கட்சியினர் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: