கோவையில் டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை, பிப். 28: டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில இணை பொதுச்செயலாளர் முத்துகுமரன் தலைமை தாங்கினார். சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தார். இதில், டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்தல், காலமுறை ஊதியம் வழங்குதல், இறந்த பணியாளர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்குதல், குடும்பத்திற்கு நலநிதி வழங்குதல், வேலை நேரத்தை இரவு 10 மணிக்கு பதிலாக இரவு 8 மணியாக குறைத்தல், சென்னையில் உள்ளது போல் அனைத்து மாவட்டங்களிலும் விற்பனைத் தொகயை அரசு வங்கி மூலம் வசூல் செய்தல் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முழக்கங்களாக எழுப்பினர்.

Advertising
Advertising

Related Stories: