×

குடியிருப்புக்குள் புகுந்த பாம்பு மீட்பு

ஈரோடு, பிப்.28:  ஈரோடு  பெரியசேமூர் நந்தவனத்தோட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (50). இவர், அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது குடியிருப்பின் காம்பவுண்ட்  சுவருக்கு அருகில் பாம்பு ஊர்ந்து செல்வதை பார்த்து ஈரோடு தீயணைப்பு  துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்பு துறையினர் அப்பகுதியில் பாம்பை தேடும் பணியில் ஈடுபட்டனர்.  அப்போது, குடியிருப்பு அருகில் உள்ள ஒரு குழியில் பதுங்கியிருந்த 3 அடி  நீளமுள்ள பாம்பை சுமார் 30 நிமிடம் போராடி உயிருடன் மீட்டனர்.  இதுகுறித்து தீயணைப்பு துறையினர் கூறுகையில்,`பிடிபட்ட இந்த பாம்பு கொடிய  விஷம் கொண்ட கண்ணாடி விரியன் வகையை சேர்ந்தது. இதை வனத்துறை அலுவலகத்தில்  ஒப்படைக்க உள்ளோம்’ என்றனர்.

Tags :
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...