×

கிருஷ்ணகிரி, ஓசூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, பிப்.28: கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில்,  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு  வட்டத் தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சந்திரன், ஊரக  வளர்ச்சித்துறை சங்க மாவட்ட தலைவர் சரவணன் ஆகியோர் ஆர்ப்பாட்டம் குறித்து  பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது, தற்காலிக ஒப்பந்த மற்றும் தினக்கூலி  அடிப்படையில் பணிபுரியும் அனைவரையும் வரன்முறைபடுத்த வேண்டும்.  காலிப்பணியிடங்கள் அனைத்தையும் காலமுறை ஊதியத்தில் பணி நியமனம் செய்ய  வேண்டும். ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தையும்  கலைத்திட வேண்டும். தேசிய ஓய்வூதிய திட்ட சந்தாதாரர்கள் அனைவரையும்  பயனளிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்க வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு  ஒருமுறை ஊதிய மாற்றத்தை உறுதி செய்ய வேண்டும். விலைவாசி உயர்வை  கட்டுப்படுத்த வேண்டும். பொது விநியோக முறையை பலப்படுத்த வேண்டும் என்பது  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். வட்ட  செயலாளர் மணி நன்றி கூறினார். ஓசூர்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் கிருஷ்ணகிரி  மாவட்ட மையம் சார்பில் ஓசூர் தாலுகா அலுவலகம்  முன்பு கோரிக்கை நாள் ஆர்ப்பாட்டம்  நேற்று மதிய நேர உணவு இடைவேளையில் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஓசூர் வட்ட தலைவர் சிவா தலைமை வகித்தார்.  மருத்துவத்துறை அந்தோணிராஜ், நெடுஞ்சாலைத்துறை திம்மராஜ், வருவாய்துறை  செந்தில், மாவட்ட செயலாளர் நடராஜன்  ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். சுரேஷ்குமார் நன்றி கூறினார்.சூளகிரி: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சூளகிரி பிடிஓ அலுவலகம் முன்பு  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட பொருலாளர் தேவராஜ் தலைமை வகித்தார். மாவட்ட இணை  செயலாளர் ஜெகதாம்பிகை, வட்ட செயலாளர், கனகவல்லி, வட்ட இணை செயலாளர்  குமரேசன் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Tags : demonstration ,Tamilnadu Government Employees Union ,Hosur ,Krishnagiri ,
× RELATED பஞ்சாயத்து ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்