×

ஊத்தங்கரை ஒன்றிய குழு கூட்டம்

ஊத்தங்கரை, பிப்.28:ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம், சேர்மன் உஷாராணி குமரேசன் தலைமையில் நடந்தது.
இதில், துணை சேர்மன் சத்தியவாணி செல்வம், பிடிஓக்கள் அன்னபூரணி, அசோகன், மாவட்ட கவுன்சிலர் மூர்த்தி, கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். கூட்டத்தில், ஊத்தங்கரை ஒன்றியத்தில் உள்ள 34 ஊராட்சிகளிலும் கடும் குடிநீர் பற்றாக்குறை நிலவுவதால், மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடப்பாரை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும். 33 ஏரிகள் இணைப்பை விரைந்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Uttankarai Union Committee Meeting ,
× RELATED கிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்