×

சரஸ்வதி வித்யாலயா கல்வி நிறுவனத்தில் ஆண்டு விழா

கிருஷ்ணகிரி, பிப்.28:கிருஷ்ணகிரி அருகே குந்தாரப்பள்ளி கூட்ரோட்டில் இயங்கி வரும் ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா கல்வி நிறுவனத்தில், இன்று(28ம்தேதி) ஆண்டு விழா நடைபெற உள்ளது.விழாவிற்கு கல்வி குழுமத்தின் தலைவர் டாக்டர் அன்பரசன் தலைமை வகிக்கிறார். தாளாளர் சங்கீதா அன்பரசன் குத்துவிளக்கேற்றுகிறார். தலைவர் முரளி, வழக்கறிஞர் பாண்டியன், அருண் எர்த்மூவர்ஸ் இயக்குநர் அருண், லட்சுமி மெடிக்கல் நிர்வாகி சுரேஷ் முன்னிலை வகிக்கின்றனர். மெட்ரிக் பள்ளி முதல்வர் சத்தியமூர்த்தி, சிபிஎஸ்இ முதல்வர் சர்மிளா ஆண்டறிக்கை வாசிக்கின்றனர். சிறப்பு விருந்தினர்களாக கிருஷ்ணகிரி எம்பி செல்லக்குமார், எம்எல்ஏக்கள் தளி பிரகாஷ், செங்குட்டுவன், முருகன், சத்யா, மாவட்ட ஊராட்சி குழுதலைவர் தட்ரஅள்ளி நாகராஜ், முன்னாள் எம்பி வெற்றிசெல்வன், முன்னாள் எம்பி அசோக்குமார், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி மற்றும் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி பள்ளிகளின் மாநில பொது செயலாளர் நந்தகுமார் ஆகியோர், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசுகளை வழங்குகின்றனர். விழா நிகழ்ச்சிகளை டிவி நடிகை வித்யாபிரதீப் தொகுத்து வழங்குகிறார். விழா ஏற்பாடுகளை நிர்வாக ஒருங்கிணைப்பாளர் புபேஷ்குமார் செய்து வருகிறார்.

Tags :
× RELATED கிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்