×

அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி

சிவகாசி, பிப்.28: சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி முதல்வர் அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லுாரி, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உதவும் நோக்கத்தில் நீட் தேர்விற்கான குறுகிய கால பயிற்சியினை ஆங்கில வழியில் வழங்க உள்ளது. ஏழை மாணவர்களுக்கு உதவும் நோக்கோடு இப்பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி வகுப்பு வருகிற மார்ச் 26ம் தேதி முதல் ஏப்.30 வரை  36 நாட்கள் தொடர்ந்து நடைபெறும். பயற்சி வகுப்பில் 4 வார தேர்வுகளும், ஒரு மாதிரி தேர்வும் நடைபெறும்.  பயிற்சி வகுப்புகள் காலை 9 மணி முதல் மாலை 5.45 மணி வரை நடைபெறும். முதலில் பதிவு செய்யும் 50 மாணவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சி வகுப்பிற்கான கட்டணம் ரூ.3500. கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் முதுநிலை பள்ளி ஆசிரியர்கள் நீட் தேர்வு பயிற்சி அளிப்பார்கள். கல்லுாரி வளாகத்தில் தங்கி படிக்க விரும்பும் மாணவர்களுக்கு தங்குமிடம் மற்றும் உணவு வசதிகள் கல்லுாரியிலேயே குறைந்த செலவில் ஏற்பாடு செய்து தரப்படும். பயற்சியில் கலந்து கொள்ள www.anjaconline.org என்ற இணைய முகவரியில் பிப்.19 முதல் மார்ச் 18 முடிய விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 97869 22782 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Tags : Need Exam Training for Government School Students ,
× RELATED ராஜபாளையம் தொகுதியில் புதிதாக அரசு...