×

. கண்டமனூர் அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்த கிராமச் சாலை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

வருசநாடு, பிப். 28: கண்டமனூர் அருகே, சந்தைக்கு செல்லும் கிராமச் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் வாகன ஓட்டிகளும், சந்தைக்கு செல்லும் விவசாயிகளும் அவதிப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.தேனி மாவட்டம், கண்டமனூர் அருகே உள்ள கருப்பு கோயில் முதல் வேலாயுதபுரம், எட்டப்பராஜபுரம் செல்லும் சாலை சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக உள்ளது. சாலையில் ஆங்காங்கே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடக்கின்றன. இந்த சாலையில் செல்லும் நான்கு சக்கர மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகளின் சக்கரங்கள் பஞ்சராவதாக கூறுகின்றனர். மேலும், இப்பகுதியில் விளைவிக்கப்படும் கத்தரி, பீன்ஸ், அவரை, துவரை, தக்காளி, எலுமிச்சை உள்ளிட்ட காய்கறிகளை தேனி, ஆண்டிபட்டி, சின்னமனூர் சந்தைகளுக்கு கொண்டு செல்ல, விவசாயிகள் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர். விவசாயிகள் சந்தைக்கு செல்லும்போது, சாலையில் கிடக்கும் ஜல்லிக்கற்களால் பயணம் தாமதமாவதாக கூறுகின்றனர். மேலும், உரிய நேரத்துக்கு விளை பொருட்களை கொண்டு செல்ல முடியவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர். இது குறித்து கிராம மக்கள் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனர். எனவே, கருப்பு கோயில் முதல் வேலாயுதபுரம், எட்டப்பராஜபுரம் செல்லும் சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : village ,Kandanur ,road ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு கிராமம்...