×

கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

உத்தமபாளையம், பிப். 28: உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் ஹௌதியா கல்லூரியில் தமிழ்த்துறை சார்பில் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு தாளாளர் தர்வேஷ் மைதீன் தலைமை வகித்தார். கல்லூரி ஆட்சிக்குழு தலைவர் செந்தல்மீரான் முன்னிலை வகித்தார். முதல்வர் முகமதுமீரான் நெறிப்படுத்தினார். தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் அப்துல்சமது வரவேற்றார். புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆய்வு நிறுவன முன்னாள் இயக்குநர் பக்தவச்சல பாரதி, தொடக்க உரையாற்றினார். திருநெல்வேலி மனோன்மனியம் சுந்தரனார் பல்கலை கழக முதன்மையர் டாக்டர் ஸ்டீபன், காந்தி கிராம பல்கலை கழக பேராசிரியர் முத்தையா, பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி தலைவர் டாக்டர் தனஞ்செயன், டாக்டர் கென்னடி, தமுஎசக அறம் கிளையின் உமர்பாரூக், உள்ளிட்ட பலரும் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியை இணைப்பேராசிரியர் முருகன், டாக்டர் அப்துல்காதர், உதவிப்பேராசிரியர் பிலால், முகமதுரபீக் மற்றும் தமிழ்த்துறையினர் ஒருங்கிணைத்தனர். இதில் மாணவ, மாணவியரின் படைப்புகள், தற்கால தமிழ்நூல்கள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றினர்.

Tags :
× RELATED மயிலாடும்பாறை காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா