×

காரைக்குடியில் சேலையில் தீப்பிடித்து பெண் சாவு...

காரைக்குடி, பிப். 28: காரைக்குடி அருகே தளக்காவூரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி கனிமொழி (38). இவர், அமராவதிபுதூர் தெற்கு குடியிருப்பில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு கடந்த வாரம் சென்றார்.  4 தினங்களுக்கு முன், கனிமொழி சமையல் செய்தபோது, அவரது சேலையில் தீப்பிடித்தது. இதில், பலத்த காயமடைந்த கனிமொழியை, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கனிமொழி நேற்று இறந்தார். இதுகுறித்து சோமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : fire ,Karaikudi ,
× RELATED தீயில் கருகி இளம் பெண் பலி