×

விழிப்புணர்வு கூட்டம்

காளையார்கோவில், பிப்.28: சிவகங்கை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ஆனந்த் தலைமையில் காளையார்கோவில் செந்தமிழ் நகர் கிழக்கு பகுதியில் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர் பூமிநாதன், காவல் ஆய்வாளர் சம்பத், புள்ளியியல் ஆய்வாளர் கண்ணதாசன், சார்பு ஆய்வாளர் பழனி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் அப்பகுதி பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். அவர்களின் குறைகளை கேட்டு அரசிடம் முறையிட்டு நிவர்த்தி செய்வதாக துணை கண்காணிப்பாளர் தெரிவித்தார். அரசின் உதவிகள் மற்றும் சலுகைகள் பற்றி விளக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சிறப்பு எஸ்ஐ பாஸ்கரன், காவலர்கள் மணிகண்டன், பிரியா, கிராம முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.


Tags : Awareness meeting ,
× RELATED கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்