×

காரைக்குடியில் என்எஸ்எஸ் முகாம்

காரைக்குடி, பிப். 28: காரைக்குடி அருகே இளங்குடியில் நாச்சியப்ப சுவாமிகள் கலை, அறிவியல் கல்லூரியின் என்எஸ்எஸ் முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் மாணிக்கவாசகம் வரவேற்றார். கோவிலூர் ஆதீனம் சீர்வளர்சீர் மெய்யப்பஞானதேசிக சுவாமிகள் தலைமை வகித்தார்.ஊராட்சி தலைவர் நேசம்ஜோசப் துவக்கி வைத்தார். மகரிஷி வித்யாமந்திர் பள்ளி ஆசிரியர் பழபாஸ்கரன், ரோட்டரி சங்க தலைவர் லியாகத்அலி, செயலாளர் அறிவுடையநம்பி உள்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் மதுபாலா ஏற்பாடுகளை செய்திருந்தார். திட்ட அலுவலர் ஜெயராஜ் நன்றி கூறினார்.


Tags : NSS Camp ,Karaikudi ,
× RELATED அன்னவாசல் அருகே குடுமியான்மலை...