×

திருப்புல்லாணி ஒன்றியக்குழு கூட்டம்

கீழக்கரை, பிப். 28: திருப்புல்லானி ஒன்றியக் குழுவின் முதல் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் புல்லாணி தலைமையில் நடைபெற்றது.அப்போது அவர் பேசுகையில், ‘ஒன்றியத்தில் உள்ள அடிப்படை பிரச்னைகள் குறித்தும் கோரிக்கை மனு அளித்தால் உடனடியாக தீர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆகவே ஒன்றிய கவுன்சிலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழகத்தின் முன்னோடி ஊராட்சி ஒன்றியமாக திருப்புல்லாணி திகழ்வதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்’ என்றார்.துணைத் தலைவர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். ஒன்றிய ஆணையாளர் ரமேஷ் குமார் வரவேற்றார். கூட்டத்தில் பல்வேறு செலவினங்கள் வாசிக்கப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது. ராமநாதபுரத்தில் மருத்துவக்கல்லூரி அமைய உத்தரவிட்ட தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கபாண்டியன். ஒன்றிய கவுன்சிலர்கள் பணிகள் அவர்களின் அதிகாரம் குறித்து விளக்கமாக பேசினார். இந்த கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் சரளாதேவி. அஞ்சலி பிரேமா முனியா சுமதி நாகநாதன் பைரோஸ்கான். கமலா. சிவா கலாராணி கோவிந்த மூர்த்தி கருத்தமுத்து, திருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் வட்டார வளர்ச்சி அலுவலர் தங்கபாண்டியன் நன்றி கூறினார். கூட்டத்தில் பத்துக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

Tags : Meeting ,Tiruppulani Union Committee ,
× RELATED வாக்காளர்களுக்கு பணம் தருவதை...