×

கார் மோதி ஒருவர் பலி

மேலூர், பிப்.28: மேலூர் நான்கு வழிச்சாலையில் பின்னால் வந்த கார் மோதியதில் டூவீலரில் சென்றவர் பலியானார்.மதுரை திருப்பாலை அருகே திருமலாபுரத்தை சேர்ந்தவர் குணசேகரன்(48). நேற்று இவர் நண்பருடன் டூவீலரில் மேலூருக்கு வந்துள்ளார். பின் இருவரும் நான்கு வழிச்சாலையில் மதுரைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.தெற்கு தெரு அருகில் இவர்களின் பின்னால் வந்த கார் திடீரென டூவீலரின் பின்னால் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குணசேகரன் பலியானார். அவரது நண்பர் காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். வழக்குபதிவு செய்து மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : car collision ,
× RELATED கார் மோதி காவலர் பலி