வாகன ஓட்டிகளுக்கு நிம்மதி பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கான கல்வி அலுவலர்கள் கூட்டம்

மதுரை, பிப்.28: பிளஸ் 2 தேர்வு மார்ச் 2ம் தேதி துவங்குகிறது. இத்தேர்வு 120 மையங்களில் நடக்கிறது. மதுரை மாவட்டத்தில் 316 பள்ளிகளில் இருந்து 17 ஆயிரத்து 89 மாணவர்கள், 19 ஆயிரத்து 204 மாணவிகள் என மொத்தம் 36 ஆயிரத்து 293 பேர் எழுதுகின்றனர். இதேபோல் பிளஸ் 1 தேர்வு மார்ச் 4ம் தேதி துவங்குகிறது. இத்தேர்வு 120 மையங்களில் நடக்கிறது. இத்தேர்வை மதுரை மாவட்டத்தில் 323 பள்ளிகளில் இருந்து 17 ஆயிரத்து 924 மாணவர்கள், 18 ஆயிரத்து 980 மாணவிகள் என மொத்தம் 36 ஆயிரத்து 904 பேர் எழுதுகின்றனர்.இந்த தேர்வுகள் ெதாடர்பான கல்வி அலுவலர்கள் பங்கேற்ற கூட்டம், மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நேற்று காலை நடந்தது. கூட்டத்திற்கு கள்ளர் சீரமைப்புத்துறை இணை இயக்குனர் குமார் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் மாவட்ட கல்வி அலுவலர்கள் வளர்மதி (மதுரை), மீனாவதி (மேலூர்), முத்தையா (உசிலம்பட்டி), இந்திராணி (திருமங்கலம்), பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வு மையங்களுக்கான முதன்மை கண்காணிப்பாளர்கள், வினாத்தாள் கட்டுப்பாட்டு அலுவலர்கள், துறை அலுவலர்கள் மற்றும் வழித்தட அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்களும் பங்கேற்றனர்.

Related Stories: