×

10, பிளஸ்2 அரசு பொதுதேர்வில் மாணவர்கள் அதிகளவு மதிப்பெண் பெற யாகம்

அலங்காநல்லூர். பிப்.28: அலங்காநல்லூர் ஐயப்பன் கோவிலில் 10 மற்றும் பிளஸ்2 அரசு பொது தேர்வு எழுதும் மாணவ,மாணவிகளுக்காக லெட்சுமி ஹயக்கிரிவர் யாகம் நடந்தது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். ஐயப்பன் சன்னதி முன்பாக உள்ள யாகசாலையில் புனித தீர்த்தம் அடங்கிய கும்பகலசம் வைத்து யாகம் நடந்தது. தொடர்ந்து லெட்சுமி ஹயக்கிரீவருக்கு பால், பழம், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான திரவியங்களாலும், மலர்களாலும் அபிஷேகம், அர்ச்சனைகள் செய்யப்பட்டது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட எழுதுபொருட்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து பூஜை மலர்களும், விபுதி பிரசாதம் மற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகி சீனிவாசன் மற்றும் அலங்காநல்லூர் வட்டார ஐயப்ப, முருக பக்தர்கள் செய்திருந்தனர்.

Tags : Govt ,
× RELATED கோடை காலத்தில் பொதுமக்களுக்கு...